50 சாயப் பட்டறைகளை இடித்து தரைமட்டமாக்கிய அதிகாரிகள்

நாமக்கல்: கழிவு நீரைக் காவிரியில் திறந்துவிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட சாயப் பட்டறைகளை வருவாய்த்துறை யினர் இடித்து தரைமட்டமாக்கினர். இதனால் நாமக்கல் அருகே பெரும் பரபரப்பு நிலவியது. இங்குள்ள குமாரபாளையத்தில் 200 சாயப் பட்டறைகள் இயங்கி வருகின்றன. இவற்றுள் 50 பட்ட றைகள் மட்டுமே சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, அரசு அனுமதியைப் பெற் றுள்ளதாகத் தெரிகிறது. மற்ற பட்டறைகளில் இருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவு நீர், அப்படியே திறந்து விடப்படுகிறது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன், காவிரி ஆறும் மாசடைகிறது.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்தும் பல பட்ட றைகள் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவில்லை. இந்நிலையில், காவிரியில் சாயக்கழிவுகளைக் கலக் கும் சாயப் பட்டறைகள் அடையாளம் காணப்பட்டன. இதற்காக அதிகாரிகள் ரகசிய ஆய்வு நடத்தினர். அதன் பின்னர் நேற்று முன்தினம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், வருவாய்த்துறையினர் இணைந்து போலிசார் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு குறிப்பிட்ட அந்த சாயப் பட்டறைகளை இடித்து தரைமட்ட மாக்கினர். மொத்தம் 50 சாயப் பட்டறைகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!