ரூ.3 லட்சத்துக்கு மேல் ரொக்கம் பெற்றால் 100% அபராதம்

புதுடெல்லி: ரூ.3 லட்சம் ரூபாய்க் கும் அதிகமான தொகையை ரொக்கமாகப் பெறுவோருக்கு அதே மதிப்பில், நூற்றுக்கு நூறு விழுக்காடு அபராதம் விதிக்கப் படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட இருப்ப தாகவும் மத்திய அரசு தெரிவித் துள்ளது. நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அண்மையில் தாக்கல் செய்த 2017-18ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ரூ.3 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை ரொக்கமாகப் பரிவர்த் தனை செய்வதற்குத் தடை விதிக் கப்படுவதாக அறிவிக்கப் பட்டிருந்தது.

இந்நிலையில், டெல்லியில் மத்திய வருவாய்த் துறை செய லாளர் ஹாஷ்முக் ஆதியா பிடிஐ செய்தியாளர்களிடம் பேசினார். "ரூ.3 லட்சத்துக்கும் அதிக மான தொகையை ரொக்கமாகப் பரிவர்த்தனை செய்வோருக்கு அதிக அளவில் அபராதம் விதிக் கப்படும். அதாவது, அந்தத் தொகையைப் பெறுவோர் அதே மதிப்புக்கு அபராதம் செலுத்த வேண்டும். உதாரணமாக ரூ.4 லட்சம் மதிப்பில் ரொக்கமாகப் பணம் பரிவர்த்தனை செய்யப்படுகிறது என்று எடுத்துக் கொண்டோம் எனில் அப்போது ரூ.4 லட்சம் அபராதமாக விதிக்கப்படும். ரூ.50 லட்சம் மதிப்புக்கு ரொக்கமாக பணம் பரிவர்த்தனை நடை பெறுகிறது எனில் ரூ.50 லட்சம் அபராதமாக விதிக்கப்படும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!