2,200 பெண்களின் கருப்பையை வேண்டுமென்றே அகற்றி பணம் பறித்த மருத்துவமனைகள்

கர்நாடகாவில் லம்பானி, தலித் இனங்களைச் சேர்ந்த ஏறக்குறைய 2,200 மாதர்கள் நான்கு தனியார் மருத்துவமனைகளில் தங்களின் கருப்பைகளை இழந்துவிட்டார்கள். வயிற்றுவலி, முதுகுவலி என்று அந்த மருத்துவமனைக்குச் சென்ற பெண்களிடம், அவர்களின் கருப் பையில் புற்றுநோய் ஏற்பட்டிருப் பதாக பொய் சொல்லி மருத்துவர் கள் வேண்டாத சிகிச்சைகளை அளித்து பெரும் பணத்தை அந்த மாதர்களிடமிருந்து வசூலித்திருக் கிறார்கள் என்று 2015 ஆகஸ்ட்டில் தெரியவந்தது. அதுபற்றி நடந்த விசாரணை களை அடுத்து அந்த மருத்துவ மனைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன. இருந்தாலும் கலாபுராகி நகர மருத்துவமனை கள் இன்னமும் செயல்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த தனியார் மருத்துவமனைகளில் அரங்கேற்றப்பட்ட இத் தகைய சட்ட விரோத சிகிச்சைகள் பற்றி பல புகார்கள் தாக்கலாயின.

இந்த மருத்துவமனைகளுக்கு அடிவயிற்றில் வலி என்றும் முதுகுவலி என்றும் கூறி சிகிச் சைக்கு வந்த பல பெண்களுக்கும் பெரும் பணத்தைக் கட்டவேண்டிய தேவை ஏற்பட்டதாகவும் தேவை யில்லாமல் இவர்களுக்குப் பல பரிசோதனைகளை மருத்துவர் கள் நடத்தியதாகத் தெரிவிக்கப் பட்டது. கருப்பையில் புற்றுநோய் இருப்பதாக நோயாளிகளிடம் கூறி, கருப்பையை அகற்றினால் தான் உயிர்பிழைக்க முடியும் என்றும் அதற்குப் பெரும் பணம் செலவாகும் என்று கூறி மருத்து வர்கள் ஏமாற்றியிருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வேளையில், அந்த மருத் துவமனைகள் செய்யும் தகாத காரியங்களைத் தடுத்துநிறுத்தக் கோரி திங்கட்கிழமை கலாபுராகி நகரில் ஆயிரக்கணக்கான மாதர்களும் தொண்டர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவரைப் போன்ற பெண்கள் பலரும் தங்கள் கருப்பையையும் இழந்து பெரும் பணத்தையும் இழந்து மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!