தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பேர் ஐஎஸ் அமைப்பில் ஐக்கியம்

மத்திய கிழக்கில் தீவிரமாக செயல்படும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எட்டு பேரும் தெலுங்கானாவைச் சேர்ந்த ஒருவரும் சென்ற ஆண் டில் சேர்ந்திருக்கிறார்கள் என்பது தெரியவந்ததை அடுத்து, சென்ற மாதம் 26ஆம் தேதி இந்தியாவின் தேசிய புலன்விசாரணை முகவை, புதிதாக வழக்கு ஒன்றைப் பதிந்து விசாரணையைத் தொடங்கி இருக்கிறது. ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் இந்திய இளையர்களைச் சேர்ப்ப தற்காக அபுதாபியிலிருந்து அனுப் பப்பட்ட மூன்று பேரை இந்த மத்திய புலன்விசாரணை அமைப்பு விசாரித்துள்ளது.

இப்போது இந்த அமைப்பின் பிடியில் இருக்கும் சேக் அஷார் அல் இஸ்லாம் அப்துல் சத்தார் ஷேக், முகம்மது ஃபர்கான் முகம்மது ரஃபிக் ஷேக், அட்னான் ஹுசேன் முகம்மது ஹுசேன் என்ற அந்த மூவரும் ஐஎஸ் சார்பில் அபுதாபியில் செயல்படுப வர்கள் என்று தெரிவிக்கப்பட்டது. ஐஎஸ் அமைப்பில் சேர்ந்துள்ள ஒன்பது பேருக்கும் வயது 30க்கும் குறைவு என்றும் அவர்கள் சிரியா சென்று அங்கு அந்த அமைப்பில் சேர்ந்துள்ளதாகவும் விசாரணை யின் மூலம் தெரியவந்தது. புது டெல்லி, சென்னை உள்ளிட்ட பல இடங்களிலும் மேல் விசாரணை நடக்கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!