செங்கோட்டையன்: சசிகலா முதல்வராவதை தடுக்க முடியாது

சென்னை: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சசிகலா முதல்வர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது என நேற்று திடீரென செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் தெரிவித்தார். இந்தச் சந்திப்பின்போது உடன் இருந்தார் அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன். "ஓர் இயக்கம் சிந்தாமல் சிதறாமல் இயங்கவேண்டுமென்றால் அதற்கு அமைதி காப்பது அவசி யம். பதவி பெரிதா, கட்சி பெரிதா என்று பார்த்தால் கட்சிதான் பெரிது," என்று கூறினார் செங்கோட்டையன். "எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாகப் பிரிந்தது. அப்போது ஜானகி ராமச்சந்திரன் முதல்வராகி 23 நாட்கள் பதவியில் இருந்தார். அதற்குப் பிறகு இரண் டாகப் பிரிந்த அதிமுக மீண்டும் இணைந்தது. "ஆனால், முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்க அதிமுக நிர்வாகிகள் முயற்சி செய்தோம். அப்போது பி.எச்.பாண்டியன் முடக்கப்பட்ட சின்னத்தைப் பெறுவதற்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அவர் சிறு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை," என்றார் செங்கோட்டையன். திமுக ஆதரவுடன் பி.எச்.பாண் டியன் தேர்தலில் போட்டியிட்டதாகச் சுட்டிக்காட்டிய அவர், எஃகுக் கோட்டையான அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்துவதே பாண்டியனின் நோக்கம் என்று செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!