'முதல்வராகும் எண்ணத்தில் சிலர் செயல்படுகின்றனர்'

சென்னை: அதிமுக பிரமுகரும் முன்னாள் சபாநாயகருமான பி.எச். பாண்டியன் மற்றும் அவரது மகன் மனோஜ் பாண்டியன் சென்னையில் நேற்று முன்தினம் செய்தியாளர் களைச் சந்தித்தனர். அப்போது பேசிய பி.எச். பாண்டியன், ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டது முதல் மரணமடைந்த தேதி வரை மருத்துவமனையில் நடந்த நிகழ்வுகளையும் அதன்பின் அதிமுக கட்சி மற்றும் ஆட்சியின் போது நடந்த மாற்றங்கள் குறித் தும் பல்வேறு தகவல்களைக் கூறினார். இந்நிலையில், பி.எச். பாண்டியன் தெரிவித்த குற்றச்சாட்டு களுக்குப் பதிலளிக்கும் வகையில் அதிமுக மூத்த தலைவர்களான செங்கோட்டையன் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தனர்.

"விளக்கங்கள் சொல்ல வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. எந்த இயக்கமாக இருந்தாலும் சிலர் எதிர்க்கத் தான் செய்வார்கள். மத்திய அரசு தலையீடு இருப்பதாக நினைக்கவில்லை. மத்திய அரசை சந்தேகப்படுவது தவறு. தற்போதுதான் கடிதத்தை கொடுத்துள்ளோம். அதனை ஏற்றுக்கொண்டுள்ளார். விரை வில் நேரம் ஒதுக்கி சொல்வார். "பாஜகவுக்குத் தமிழகத்தில் அரசியல் ஆதாயம் எதுவும் இல்லை. முதலமைச்சராக பதவி யேற்க வேண்டும் என்ற எண்ணத் தில் அதிமுக நிர்வாகிகள் சிலர் இயங்கி வருகின்றனர்.

ஸ்டாலின் செயல் தலைவராக உள்ளார். அதனால்தான் சும்மா இருக்க முடியாமல் டெல்லி சென்றுள்ளார். "முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக கட்டுக்கோப்புடன் செயல்பட்டு வருகிறது. கட்சிக் குள் ஒரு பிரச்சினை என்றால் எடுத்துச்சொல்ல வேண்டிய இடம் பொதுக்குழு. ஆனால் அவர் நேரடியாக செய்தியாளர்களைச் சந் தித்துள்ளார். "அனைத்து உறுப்பினர்களிட மும் வாக்கெடுப்பு நடத்த அவகா சம் இல்லாததால் பொதுக்குழு சசி கலாவை பொதுச்செயலாளராக பரிந் துரைத்தது. அதிமுக பொதுக் குழு, பொதுச் செயலாளரை பரிந்துரைக்கலாம், பிறகு தேர்வு செய்யப்பட்டவர் கட்சி உறுப்பினர் களின் ஆதரவைப் பெறலாம். "அதிமுகவின் முடிவுகளுக்கு எதிராக மக்கள் இருக்கின்றனர் என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. முதலமைச்சர் யார் என்பதை முடிவுசெய்வது அதிமுக வின் உட்கட்சி விவகாரம்," என்றார் பண்ருட்டி ராமச்சந்திரன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!