வெங்கையா: ஆளுநர் சட்டமுறைகளை நன்கு ஆராய்வார்

புதுடெல்லி: தமிழக அரசியல் களத்தில் பெரும் சலசலப்பும் பரபரப்பும் நிலவி வரும் நிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ், சட்ட முறைகளை நன்கு ஆராய்ந்த பிறகு தக்க நடவடிக்கைகளை மேற்கொள்வார் என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர் களிடம் பேசிய அவர், ஆளுநர் தான் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரதிநிதி என்றார். தமிழகத்தில் உள்ள அரசியல் கள நிலவரம் தொடர்பாக பிறரைக் குற்றம்சாட்டுவது சரியல்ல. இவ் வாறு குற்றம்சாட்டுவதற்கான எந்த முகாந்திரமும் இல்லை," என்றார் வெங்கையா நாயுடு.

இதற்கிடையே, தமிழக முதல் வராக அதிமுக பொதுச்செயலர் சசிகலா பொறுப்பேற்பதில் எத்த கைய சட்டச் சிக்கலும் இருப்ப தாகத் தெரியவில்லை என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் (அட்டர்னி ஜெனரல்) முகுல் ரோஹட்கி தெரிவித்துள்ளார். சசிகலாவுக்கு முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைப் பது குறித்து தமிழக ஆளுநர் தம்மிடம் ஆலோசனை கேட்டதாக வெளியான தகவல்களை அவர் திட்டவட்டமாக மறுத்தார். "தமிழகப் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் என்னிடம் எவ்வித சட்ட ஆலோசனையும் பெறவில்லை. "அதேவேளையில், சசிகலா முதல்வராக வேண்டும் என அவரது கட்சியினர் கூடி முடிவு எடுத்துள்ளனர். சசிகலா முதல் வராவதில் சட்ட சிக்கல் ஏதும் இல்லை," என்று முகுல் ரோஹட்கி தெரிவித்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!