சசி, திமுக இடையேதான் தொடர்பு: நத்தம் புகார்

சென்னை: சசிகலா தூண்டுதல் காரணமாக திமுக ஆதரவு பெற்ற மதுபான ஆலைகளில் இருந்து அதிகளவு மது வகைகள் வாங்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார். தற்போது முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள அவர், சசிகலாவுக்கும் திமுகவுக்கும் தான் தொடர்பு உள்ளது என்றும் மிடாஸ் மதுபான ஆலையே அதற்கு சாட்சி என்றும் குறிப்பிட்டுள்ளார். "சசிகலாவுக்கு, சில எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கலாம். ஆனால், கட்சித் தொண்டர்களிடமும் மக்களிடமும் பன்னீர் செல் வத்துக்குத் தான் ஆதரவு இருக்கிறது. எனவே, எம்எல்ஏக்கள் எண்ணிக்கை அடிப்படையில் சசிகலா மகிழ்ச்சி அடையக் கூடாது.

"திமுக ஆட்சியில் கூட சசிகலா தரப்புக்குச் சொந்தமான மது ஆலை யில் இருந்து, அதிகளவில் மது வகைகள் கொள்முதல் செய்யப்பட்டன. கடந்த முறை, நான் அமைச்சராக இருந்தபோது திமுக ஆதரவு மது ஆலைகளில் இருந்து, அதிக மது வகைகள் வாங்கப்பட்டன. அதற்கும் சசிகலாவின் தூண்டுதலே காரணம்," என்று நத்தம் விஸ்வநாதன் மேலும் தெரிவித்துள்ளார். இவ்வாறு சசிகலா தரப்பு மீது ஓபிஎஸ் ஆதரவாளர் கள் பல்வேறு அதிரடிக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!