நாளுக்கு நாள் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு அதிகரிப்பு

சசிகலா தரப்பில் இருந்து விலகி, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் சாயும் அதிமுக தலைவர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், திரையுலகப் பிரபலங்களின் எண்ணிக்கை கூடி வருகிறது. வேலூர் எம்.பி. செங்குட்டுவன், தூத்துக்குடி எம்.பி. ஜே.டி.நட்டர்ஜீ, பெரம்பலூர் எம்.பி. மருதராஜ், விழுப்புரம் எம்.பி. ராஜேந்திரன், ஆரணி எம்.பி. செஞ்சி ஏழுமலை, மாநிலங்களவை உறுப்பினர் லட்சுமணன் ஆகியோர் நேற்று ஓபிஎஸ்ஸைச் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். முன்னதாக, மைத்ரேயன், அசோக் குமார், பி.ஆர். சுந்தரம், சத்யபாமா, வனரோஜா ஆகியோரும் ஓபிஎஸ் பக்கம் இணைந்தனர். இதையடுத்து, ஓபிஎஸ் ஆதரவு எம்.பி.க்களின் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. ஆறு எம்எல்ஏக்களும் அவர் பக்கம் உள்ளனர். ஈரோடு மேயர் மல்லிகாவும் ஓபிஎஸ் பக்கம் சாய்ந்த நிலையில் இன்னும் பல மேயர்கள் சசிகலாவுக்கு எதிராகக் கிளம்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாகக் குரல் தரும் திரையுலக நட்சத்திரங்கள் பட்டியலில் இயக்குநர் பாலா, நடிகர்கள் ராமராஜன், தியாகு, அருண் பாண்டியன் ஆகியோரும் இணைந்துள்ளனர். ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு கூடி வருவதால் சசிகலா தரப்பு அதிர்ந்து போயுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!