கலிபோர்னியாவில் அணை உடையும் ஆபத்து

வா‌ஷிங்டன்: வடக்கு கலிபோர்னி யாவில் பெரிய அணை ஒன்று உடையும் ஆபத்து உள்ளதால் ஆயிரக்கணக்கான மக்கள் வெளி யேற்றப்பட்டனர். கடந்த சில நாட்களாக பெய்த மழையில் ஓரோவில் என்ற 770 அடி ஆழ அணைக்கட்டு பலவீன மடைந்தது. இதனால் எந்த நேரத்திலும் அணை உடையலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சுற்று வட்டாரத்தில் வசிக்கும் 180,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தப் பகுதியில் இந்தியர்கள் அதிகம் வசிப்பதாகவும் கூறப்படுகிறது. பல ஆண்டுகள் வறட்சிக்குப் பிறகு பெய்த கனமழையில் நீர்த் தேக்கம் நிரம்பி வழிகிறது என்று புட்டே கவுண்டியின் ஷெரிஃப் கோரி ஹோனியா சொன்னார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!