சொகுசு விடுதியில் எம்எல்ஏக்கள்: லட்சக்கணக்கில் செலவிட்ட சசிகலா

சென்னை: அதிமுக எம்எல்ஏக்களை சொகுசு தங்குவிடுதியில் தங்க வைப்பதற்கு சசிகலா தரப்பினர் 50 லட்சம் ரூபாய்க்கும் மேல் செலவிட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அந்த தங்குவிடுதியில் ஓர் அறையின் ஒரு நாள் வாடகை மட்டுமே ரூ.5,500 முதல் ரூ.9,900 வரை ஆகும் என்றும் விடுதியில் உள்ள மொத்த அறைகளையும் பயன்படுத்தியதால் 6 நாட்களுக்கு ரூ.25 லட்சம் வரை செலவிட்டிருப்பதாகத் தெரிகிறது. எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் என 200 பேர் விடுதியில் தங்கியிருந்துள்ளனர்.

அவர்களுக்கு உணவு, தண்ணீர், நொறுக்குத் தீனிகள், பழங்கள், பானங்கள் ஆகியவை தாராளமாக வழங்கப்பட்டதாகவும், இதனால் உணவுக்கு மட்டும் ரூ.25 லட்சம் செலவிடப்பட்டதாகவும் தெரிகிறது. இதைத் தவிர தொலைபேசி, போக்குவரத்து என பிற விஷயங்களுக்காகவும் சில லட்சங்கள் செலவானதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!