எம்எல்ஏக்களை சந்திக்கச் சென்ற அமைச்சரைத் தடுத்த காவல்துறை

சென்னை: கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்கியுள்ள அதிமுக எம்எல்ஏக்களைச் சந்திக்கச் சென்ற அமைச்சரின் வாகனத்தை போலிசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கும் போலிசாருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது. இதனால் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. எம்எல்ஏக்களை மீட்டு வருவதற்காக அமைச்சருடன் முதல்வர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலரும் சென்றிருந்தனர். எனினும் கூவத்தூர் அருகே கோவளம் பகுதியிலேயே அவர்களைப் போலிசார் தடுத்தனர். அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு கூவத்தூரில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அமைச்சரும் அவருடன் சென்ற முதல்வரின் ஆதரவாளர்களும் வேறு வழியின்றி சென்னை திரும்பி விட்டதாகத் தகவவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!