குத்தாட்டம் போட்ட தொண்டர்கள்

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட மூவரையும் குற்றவாளிகள் என அறிவித்துள்ள உச்ச நீதிமன்றம் உடனடியாக அவர்களை சரணடையும்படியும் உத்தரவிட்டுள்ளதால் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வீட்டின் முன்பு அவரது ஆதரவாளர்கள் ஆனந்தக் கூத்தாடி வருகின்றனர்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பை ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் வரவேற் றுள்ளனர். ஏற்கெனவே சசிகலா மேல் எரிச்சலில் இருந்து வந்த மக்களை உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குளிர வைத்துள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் நீதிமன்ற நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை உச்ச நீதி மன்றம் உறுதி செய்ததை அடுத்து அதிமுகவில் உள்ள சசிகலா எதிர்ப்பாளர்கள் குத்தாட்டம் போட்டும் பட்டாசுகளை வெடித் தும் லட்டு, கேசரி போன்ற இனிப்புகளைப் பகிர்ந்துகொண் டும் கொண்டாடி வருகின்றனர்.

சசிகலாவுக்கு மரண அடியாக விழுந்துள்ள 4 ஆண்டு சிறைத் தண்டனை தீர்ப் பால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள முதல்வர் ஓபிஎஸ் இல்லம் முன்பாக கூடிய அவரது ஆதர வாளர்கள் லட்டு, கேசரி போன்ற இனிப்புகளைப் பரிமாறிக்கொண் டும் குத்தாட்டம் போட்டும் வெடி களை வெடித்தும் கொண்டாடினர். படம்: ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!