திமுக எனும் கட்சியே இருக்கக் கூடாது: சசிகலா ஆவேசப் பேச்சு

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கு தொடுக்கப்பட திமுக தான் காரணம் என்றும் அக்கட் சியை அதிமுகவினர் இறுதிவரை கடுமையாக எதிர்க்கவேண்டும் என்றும் அதிமுக பொதுச்செயலர் சசிகலா வலியுறுத்தி உள்ளார். நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் போயஸ் தோட்ட இல்லத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் ஆவேச மாக உரையாற்றிய அவர், அதிமுக தான் தமிழகத்தை ஆள வேண்டும் என்றார். "நான் எதற்கும் பயப்படவில்லை. அனைவரும் தைரியமாக இருங் கள். நம்மை யாரும் எதுவும் செய்துவிட முடியாது. எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று அறிஞர் அண்ணா சொல்லி உள்ளார். அதன்படி, சிங்கம் போல் நம் ஜெயலலிதா இருந்தார். அவரைப் போல் நாமும் சிங்கங் களாக இருப்போம். "அதிமுகவை அழிக்க நினைக்கிறது திமுக. எனவே திமுக என்ற கட்சியே இருக்கக்கூடாது என நாம் உறுதியேற்க வேண்டும்," என்றார் சசிகலா (படம்).

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!