சசியால் ஆதாயமடைந்த எம்எல்ஏக்கள்: நாமக்கல் எம்பி புகார்

நாமக்கல்: எடப்பாடி பழனிசாமி முதல்வராக ஆதரவு தெரிவித்த அதிமுக எம்எல்ஏக்கள் பல்வேறு வகையில் ஆதாயம் அடைந்துள் ளதாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் சுந்தரம் தெரிவித்துள்ளார். நேற்று ராசிபுரத்தில் செய்தியா ளர்களிடம் பேசிய அவர், கூவத் தூரில் தங்கவைக்கப்பட்டிருந்த போது அதிமுக எம்எல்ஏக்கள் நட னமாடுவது, சைக்கிள் ஓட்டுவது என ஜாலியாகப் பொழுதைக் கழித்ததாகக் குற்றம்சாட்டினார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு அதிமுகவின் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிப்படையாக ஆதரவு தெரி வித்துள்ளனர். அவர்களில் நாமக் கல் தொகுதி எம்பி சுந்தரமும் ஒருவராவார்.

நேற்று முன்தினம் ராசிபுரத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்த அவர், அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சசிகலா தரப்பை ஆதரிக்க அதிமுக எம்எல்ஏக்கள் பெற்ற பலன்களை விரைவில் அம்பலப்படுத்தப்போவதாக அவர் சூளுரைத்தார்.

விவரம்: தமிழ்முரசு இ-பேப்பர்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!