சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியில் தொய்வு: வைகோ

குமரி: நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகும் கூட சீமைக்கருவேல மரங்களை அழிக்கும் பணி தமிழகத்தின் பல பகுதிகளில் முறையாக நடைபெற வில்லை என மதிமுக பொதுச் செயலர் வைகோ கவலை தெரிவித்துள்ளார். குமரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சீமைக்கருவேல மரங்களை அழிக்கும் பணிக்காக மாணவர்களும் இளையர்களும் ஒன்று சேர வேண்டும் என அழைப்பு விடுத்தார். "தமிழகத்தில் நீர் ஆதாரங்களை அழித்துக்கொண்டு இருக் கும் சீமைக்கருவேல மரங்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் அம்மரங்களை அழிக்கும் பணி பல இடங்களில் நடக்கவில்லை. இந்நிலை மாற வேண்டுமானால், சமுதாய நலன் கருதி மாணவர்களும் இளையர்களும் இந்தப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும்," என்றார் வைகோ.

குமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளைத் தூர்வார வேண்டும் என்று தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து தாம் வாதாடியதாகக் குறிப்பிட்ட அவர், அதன் காரணமாக இரு அணைகளையும் தூர்வார உத்தரவிடப்பட்டதாகத் தெரிவித்தார். "இந்த அணைகளில் தற்போது தண்ணீர் குறைவாக உள் ளது. எனவே இரு அணைகளிலும் தூர்வாரும் பணியை அரசு மேற்கொள்ள வேண்டும்," என்று வைகோ வலியுறுத்தினார்.

விவரம்: தமிழ்முரசு இ-பேப்பர்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!