ஏடிஎம் இயந்திரத்தில் செல்லாத நோட்டுகள்

புதுடெல்லி: டெல்லியின் சங்கம் விகார் பகுதியில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து ரோகித் குமார் என்பவர் பணம் எடுத்தபோது போலியான ரூ.2,000 நோட்டுகள் விநியோகம் ஆகியுள் ளன. இயந்திரத்தில் வெளிவந்த ரூ.8,000 பணத்தை முதலில் பார்த்தபோது அந்தப் பணத்தின் மீது எந்த ஒரு சந்தேகமும் வரவில்லை. தொடர்ந்து அதை உற்றுப் பார்த்தபோதுதான் அது போலியான பணம் என்பது தெரியவந்தது. அந்தப் பணத்தின் எண் '000000' என்று அச்சிடப் பட்டிருந்தது என்று பணத்தை எடுத்த ரோகித் கூறினார்.

ரோகித் புகாரின்பேரில் காவல் துறையினர் நடத்திய சோதனை யின்போது, அவர்கள் எடுத்த பணமும் இதேபோன்று போலி யானதாக வந்துள்ளது. அதிலும் குழந்தைகள் வங்கி ஆஃப் இந்தியா என்று அச்சிடப்பட்ட 2,000 ரூபாய் நோட்டு வெளி வந்துள்ளது. போலி 2,000 ரூபாய் நோட்டில் அசோக சக்கரம் இருக்கும் இடத்தில் 'சுரன் லேபிள்' என்றும் ஆளுநர் கையெழுத்து இல்லாமலும் இருந்துள்ளது. இந்த ஏடிஎம் இயந்திரம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

விவரம்: தமிழ்முரசு இ-பேப்பர்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!