காவல்துறை வாகனத்தில் சென்ற கைதி வெட்டிக் கொலை

நெல்லை: நெல்லை நீதிமன்றத்தில் நிறுத்துவதற்காக பாளையங் கோட்டையில் இருந்து தூத்துக் குடிக்கு காவல்துறை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்ட கைதி ஒருவரை 15 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொன்றது. துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப் பட்ட கைதி கொல்லப்பட்டது நெல்லை முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்த கைதி சிங் காரத்தை காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 4 காவல் துறையினர் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் காவல்துறை வாகனத்தில் அழைத்துச் சென்றனர். இந்த வாகனம் நெல்லை கேடிசி நகர் சாவடி அருகே சென்ற போது 15 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென வாகனத்தை மறித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் உள்ளே இருந்த காவல்துறையினர் மீது மிளகாய்ப் பொடி கலந்த தண்ணீரை அந்தக்கும்பல் பீய்ச்சி அடித்தது.

காவல்துறை வாகனத்தில் இருந்த கைதியை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டி சாய்த்தது. இறந்தவரின் உடல் மறைக்கப்பட்டுள்ளது. படம்: தமிழக ஊடகம்

விவரம்: தமிழ்முரசின் இ-பேப்பரில் பார்க்கவும்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!