‘ரிங்கிங் பெல்ஸ்’ இயக்குநர் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்

புதுடெல்லி: காவல் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 'ரிங் கிங் பெல்ஸ்' இயக்குநர் மோகித் கோயல் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் என்ற விவரம் தெரிய வந்துள்ளது. நேற்று முன் தினம் மோசடி தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டார். உலகிலேயே ஆக மலிவான விலையில் வெறும் ரூ. 251க்கு (ஐந்து சிங்கப்பூர் வெள்ளி) 'ஃபிரீ டம் 251' என்ற பெயரில் திறன் பேசியை வழங்கப்போவதாக அறி வித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யவர் மோகித் கோயல். இவரது அறிவிப்பு பல தொலை தொடர்பு நிறுவனங்களையும் அதிர்ச்சியடைய செய்தது. இருப்பினும் சுமார் ஏழு கோடி பேர் (70 மில்லியன் பேர்) இணையம் வழி 'ஃபிரீடம் 251' பதிவு செய்தனர். இந்த நிலையில் மோஹித் கோயல் மீது ஒருவர் காவல்துறையில் புகார் செய்தார். அதில், கடந்த 2015ஆம் ஆண்டு 'பிரீடம் 251' கைபேசியை விநியோகிப்பதற்காக ரூ.30 லட் சத்தை அந்த நிறுவனத்திடம் அளித்தேன். ஆனால் அவர்கள் ரூ.14 லட்சம் மதிப்புள்ள பொருட் களை மட்டுமே எங்களுக்கு அளித்தனர். அதில் என்னிடம் ரூ.16 லட்சத்தை மோகித் கோயல் மோசடி செய்து விட்டார் எனக் கூறப்பட்டு இருந்தது. விசாரணையில் அவர் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் என்பதும் அதிலும் அவர் தேறவில்லை என்பதும் தெரிய வந்துள் ளது என்று காவல்துறையினர் கூறினர்.

திறன்பேசிகளுடன் மோகித் கோயல். கோப்புப் படம்: ஊடகம்

விவரம்: தமிழ்முரசின் இ-பேப்பரில் பார்க்கவும்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!