4 நாட்களாகக் கிடந்த ரூ.25 லட்சம்

குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள ஓர் ஏடிஎம் இயந் திரம் அருகே கட்டுக்கட்டாக ஒரு பெட்டிக்குள் வைக்கப் பட்டிருந்த 24.68 லட்சம் ரூபாய் பணம் நான்கு நாட்களாகக் கேட்பாரற்றுக் கிடந்துள்ளது. கைவிடப்பட்ட இடத்திலேயே கடந்த வியாழக்கிழமை முதல் அப்பெட்டி இருந்துள்ளது. ஏடிஎம் இயந்திரத்தைப் பயன்படுத்த வந்த பலரும் அதனைப் பொருட்படுத்தவில்லை. இருப்பினும் ஞாயிற்றுக் கிழமை காலை மாணவர் ஒருவர் அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்தார். 500 ரூபாய், 2000 ரூபாய் நோட்டுகள் அப்பெட்டிக்குள் கட்டுக்கட்டாக இருந்துள்ளன. மாணவர் தெரிவித்த தகவலைத் தொடர்ந்து போலிசார் வந்து பெட்டியை மீட்டனர். ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்புவதற்காகக் கொண்டு வந்த பணத்தை ஊழியர்கள் மறந்துபோய் அங்கு வைத்துவிட்டுச் சென்றதாக போலிஸ் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!