அதிமுக நிர்வாகிகளுடன் தினகரன் ஆலோசனை

சென்னை: கட்சியையும் ஆட்சியை யும் தக்கவைக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிமுக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலர் தினகரன் நேற்று முன்தினம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். கட்சித் தலைமை மீதான அதிருப்தி காரணமாக எதிர் முகாமுக்கு செல்லக்கூடும் எனக் கருதப்படும் நிர்வாகிகளை அவர் சமாதானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. சசிகலாவால் துணைப் பொதுச் செயலராக நியமிக்கப்பட் டது முதல் கட்சியில் பல்வேறு வகையிலும் எதிர்ப்புகளை எதிர் கொண்டு வருகிறார் தினகரன். ஏற்கெனவே ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் ஜெயலலிதாவின் உறவினர் அணியினர் சசிகலாவுக்கும் தினகரனுக்கும் எதிராக வரிந்துகட்டி வருகின்றனர்.

அதிமுக துணைப் பொதுச் செயலர் பதவிக்கு தினகரன் தகுதியற்றவர் என்று தீபக் கடுமையாக விமர்சித்துள்ளார். இதன் எதிரொலியாக சசிகலா வின் எதிரணிக்குச் செல்வதா? வேண்டாமா? எனும் யோசனையில் இருந்த சில நிர்வாகிகள், தினக ரன் மீது அதிருப்தி கொண்டுள் ளதாகக் கூறப்படுகிறது. இத்தகைய நெருக்கடிகளைச் சமாளிப்பது, கட்சியைத் தக்க வைப்பது தொடர்பாக அமைச்சர் கள், நிர்வாகிகளுடன் தினகரன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகளுக்கு: epaper.tamilmurasu.com.sg

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!