அதிமுகவுக்கு திமுக எம்எல்ஏக்கள் ஆதரவு: அமைச்சர் ராஜேந் திர பாலாஜி

"ரகசிய வாக்கெடுப்பு நடத்தி இருந்தால் என்ன ஆகியிருக்கும்? அன்றைய தினம் 50 திமுக எம்எல்ஏக்கள் அதிமுகவுக்கு வாக் களிக்கத் தயாராக வந்திருந்தனர் என்பது ஸ்டாலினுக்கு தெரியாது. "மொத்தமுள்ள 89 திமுக எம்எல்ஏக்களில் 50 பேர் அதிமுக வுக்கு வரத் தயாராக உள்ளனர். ஸ்டாலின் ஜாதகத்தில் அவர் முதல்வர் ஆகும் வாய்ப்பு கிடை யாது," என்றார் அமைச்சர் ராஜேந் திர பாலாஜி. அதிமுக எம்எல்ஏக்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்கி ஆட்சியைப் பிடிக்கலாம் என மு.க.ஸ்டாலின் துடிப்பதாகக் குற்றம்சாட்டிய அவர், ஸ்டாலின் கனவு ஒருபோதும் பலிக்காது என்றார்.

"எங்களுடைய ஆட்சி சிறப் பான முறையில் நடந்து வருகிறது. ஒருவேளை ஆட்சி நிர்வாகத்தில் ஏதேனும் குறை இருந்தால் சொல்லுங்கள். நாங்கள் திருத்திக் கொள்கிறோம். மாறாக குறுக்கு வழிகளைப் பின்பற்ற வேண்டாம்," என்று ராஜேந்திர பாலாஜி மேலும் கூறினார். அதிமுகவில் இருந்து விலகிச் சென்றவர்கள் மீண்டும் தாய்க் கழகத்துக்குத் திரும்புவார் கள் என்று குறிப்பிட்ட அவர், எந்தச் சூழ்நிலையிலும் தமிழக மக்கள் அதிமுகவுக்கு மட்டுமே ஆதரவாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அமைச்சரின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு: epaper.tamilmurasu.com.sg

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!