மசோதாவுக்கு ஒப்புதல்: பழைய ரூ.500, ரூ.1000 வைத்திருந்தால் அபராதம்

புதுடெல்லி: பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் வைத்திருப்போருக்கு அபராதம் விதிக்கும் சட்ட மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எட்டாம் தேதி பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததை அடுத்து புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பழைய நோட்டுகளை மாற்றிக்கொள்ள அவகாசமும் வழங்கப்பட்டது. பின்னர் இது தொடர்பாக நாடாளு மன்றத்தில் சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்படி, பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை பத்து நோட்டுகளுக்கு மேல் வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகும். அதற்கு மேற் வைத்திருப்போர் அந்தத் தொகையைப் போல ஐந்து மடங்கு தொகையை அபராதமாகக் கட்ட வேண்டும். இந்தச் சட்ட மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!