ஆர்எஸ்எஸ்-கம்யூனிஸ்ட் போட்டாபோட்டி வன்செயல்

கேரளா: கேரளாவில் ஆர்எஸ்எஸ் அமைப்பினரும் கம்யூனிஸ்ட் தரப் பினரும் போட்டாபோட்டி வன்செய லில் ஈடுபட்டு வருகின்றனர். கோழிக்கோடு மாவட்டத்தில் நடப்புறம் அருகே கல்லாச்சி என்ற ஊரில் இருந்த ஆர்எஸ்எஸ் அமைப்பின் அலுவலகம் மீது கையெறி குண்டு வீசப்பட்டது. அதற்கு அடுத்த நாளன்று விஷ்ணு மங்களம் என்ற ஊரில் இருந்த சிபிஎம் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்கு இன்னாரென்று தெரியாத நபர்கள் தீ வைத்தனர். இந்தச் சம்பவங்களில் இது வரையில் உயிர்ச்சேதம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் ஊழியர்கள் நால்வர் காயம் அடைந் ததாக போலிஸ் தெரிவித்தது. அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அதி காரிகள் தெரிவித்தனர். கேரள முதல்வர் பினராய் விஜயன் தலையைக் கொய்பவருக்கு ஒரு கோடி ரூபாய் கொடுக்கப்படும் என்று மத்திய பிரதேச மாநிலத்தில் செயல்படும் ஆர்எஸ்எஸ் இயக்கம் அறிவிப்பு விடுத்த ஒரு மணி நேரம் கழித்து கேரளாவில் அந்த இயக்கத்தின் அலுவலகத்தில் குண்டு வீசப்பட்டது.

கேரளாவில் ஆர்எஸ்எஸ் =கம்யூனிஸ்ட் வன்செயல்களில் கண்ணூர் மாவட்டத்தில் 300 பேருக்கும் அதிக மக்கள் மாண்டு இருக்கிறார்கள். முதல்வரின் தொகுதியில் சென்ற ஆண்டு அக்டோபரில் கொல்லப்பட்ட சன்பரிவார் தொண்டர் ஒருவருக்கு ஆர்எஸ்எஸ் பாஜக உறுப்பினர்கள் அண்மையில் அஞ்சலி செலுத்தினார்கள். படம்: இந்திய ஊடகம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!