மேற்கு வங்காளத்தில் குழந்தை கடத்தலில் அரசியல்வாதிகள்

கோல்கத்தா: மேற்கு வங்காள மாநிலத்தில் ஜல்பைகுரி மாவட்டத்தில் குழந்தைகள் கடத்தலில் முக்கிய அரசியல் கட்சிப் பிரமுகர்கள் சிலருக்குத் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. அண்மையில் கைதான பாஜக பெண் தலைவர் ஜூகி சௌத்ரி, போலிசிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இது பற்றி மாநில காவல்துறை உளவுப் பிரிவு அதிகாரி ஒருவர் விளக்கினார். "குழந்தைகள் கடத்தல் தொடர்பாக கைதுசெய்யப் பட்டுள்ள ஜூகி சௌத்ரியிடம் விசாரணை நடக்கிறது. இந்த விவகாரத்தில் முக்கிய அரசியல் கட்சிப் பிரமுகர்கள் சிலருக்குத் தொடர்பு இருப்பதாக அவர் தெரிவித்தார். ஆனால் அந்த நபர்கள் பற்றிய விவரங்களை இப்போது கூற முடியாது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யபட்டுள்ள சந்தான சக்கரவர்த்தி கூறிய தகவலுக்கும் ஜூகி சௌத்ரி கூறிய கருத்துக்கும் முரண்பாடு உள்ளது. எனவே, இருவரிடமும் ஒரே நேரத்திலும் தனித் தனியாகவும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம்," என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!