பிரணாப்: இந்தியா வலிமையான நாடாக உருவாகி வருகிறது

சென்னை: இந்தியா வலிமையான நாடாக உருவாகி வருகிறது என்று சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் நடந்த விழாவில் அதிபர் பிரணாப் முகர்ஜி பேசினார். ஒவ்வோர் ஆண்டும் ராணுவத்துக்குச் சிறந்த சேவை ஆற்றும் வகையிலும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதிலும் போர்க்கால பயிற்சி பெறுவதிலும் சிறப்பாக விளங்கக்கூடிய படைப் பிரிவுகளுக்கு அதிபர் விருது வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு சென்னை தாம்பரத்தில் உள்ள விமான படைத் தளத்துக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் விழாவில் அதிபர் கலந்து கொண்டார். விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு உரையாற்றிய பிரணாப் முகர்ஜி, இந்தியாவில் சகிப்புத்தன்மை அற்ற போக்குக்கு இடமில்லை என்றார். இந்தியா வலிமையான நாடாக உருவாகி வருகிறது என்றும் விமானப்படை தொழில்நுட்ப வளர்ச்சியில் அது சிறந்து விளங்குகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!