தெற்கே கனமழை, வடக்கே கடும் வெயில்

சென்னை: தென்தமிழகக் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என அண்மையில் அறிவிக்கப்பட் டிருந்தது. செவ்வாய், புதன்கிழமை களில் வெயில் சுள்ளென்று சுட் டெரித்த நிலையில் நேற்று தமி ழகத்தின் பல பகுதிகளில் கன மழை பெய்தது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, முதுகுளத்தூர் போன்ற பகுதிகள், தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்று வட்டார ஊர்கள், நாகை, புதுக் கோட்டை மாவட்டங்களில் காலை முதல் நீண்ட நேரம் மழை பெய்தது. திண்டுக்கல் நகரிலும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் மதுரை, அருப்புக்கோட்டையிலும் மழை பெய்து வெப்பத்தைத் தணித்தது. தென்தமிழகம் குளிர்ந்த போதி லும் வடதமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வர்தா புயலுக்குப் பின்னர் வெயில் சுட்டெரித்து வரு கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!