சுற்றுலா பயணிகள் வருகையில் தமிழகம் முதலிடம்

சென்னை: தமிழகத்துக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிக ரித்து வருகிறது. இந்நிலையில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தந்த மாநிலம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது தமிழகம். கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தப் பெருமை தமிழகத்தின் வசமே உள்ளது. பல வகையிலும் வளர்ச்சி கண்டுள்ள வட மாநி லங்களை பின்னுக்குத் தள்ளி விட்டு தமிழகம் சுற்றுலாப் பயணி களை ஈர்த்து வருகிறது. மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக் கூடிய இடங்கள் ஏராளமாக உள் ளன. மெரினா கடற்கரை, பார்ப்ப வரை வியக்க வைக்கும் புகழ்பெற்ற கோவில்கள், குளிர் பிரதேசங்கள் என பல்வேறு வகையிலும் சுற்று லாப் பயணிகளை மகிழ்விக்கும் அம்சங்கள் இருக்கின்றன. இந்நிலையில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தந்த மாநிலம் என்ற பெரு மையை தொடர்ந்து 3ஆவது ஆண்டாக தமிழகம் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இப்பட் டியலில் அடுத்தடுத்த இடங்களை உத்தர பிரதேசமும், மூன்றாவது இடத்தை மத்திய பிரதேசமும் பெற்றுள்ளன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!