பிச்சைமுத்து: ஜெயா சொத்துக்களை ஏலம் விட வாய்ப்பு உள்ளது

பெங்களூரு: காலஞ்சென்ற முதல்வர் ஜெயலலிதாவின் சொத் துக்கள் ஏலம் விடப்பட வாய்ப் புள்ளதாக பெங்களூரு நீதிமன்ற சிறப்பு அதிகாரி பிச்சைமுத்து தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதை யாரிடம், எப்படி வசூலிப்பது என்பது குறித்து அவர் விரிவாக விளக்கம் அளித்துள்ளார். "கடந்த 1991 முதல் 1996ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா வாங்கிய சொத்துக்களை மட்டுமே பறிமுல் செய்ய முடியும். அவரது இதர சொத்துக்கள் மீது நடவ டிக்கை எடுக்க இயலாது. குறிப் பாக போயஸ் தோட்ட வீட்டின் இரு தளங்களின் மீதும் நீதி மன்றம் எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாது. "சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையின்போது கைப்பற்றப் பட்ட தங்க நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள், வாகனங்கள் ஆகியவற்றை ஏலம் விட்டு அப ராதத் தொகையை வசூலிக்க லாம்," என்று பிச்சைமுத்து கூறி உள்ளார்.

பிச்சைமுத்து படம்: ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!