தென்னிந்தியாவின் முதல் ரப்பர் தடுப்பணை: உதகையில் அமைப்பு

நீலகிரி: தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக கான்கிரீட் தடுப்ப ணைக்கு மாற்றாக ரப்பர் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. உதகை யில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தடுப்பணையின் உயரத்தைக் கூட்டவும் குறைக்கவும் முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உதகை அருகே உள்ள பால கொலா சில்லஹல்லா பகுதியில், ரூ.8 லட்சம் செலவில் இந்த ரப்பர் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளதாக இந்திய நீர் மற்றும் மண் வளப் பாதுகாப்பு நிறுவனத் தலைவர் ஓ.பி.எஸ்.கோலா தெரிவித்தார். "ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள இந்திய நீர் மேலாண்மை நிறுவன விஞ்ஞானிகளால் ரப்பர் தடுப்பணை தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டது. ஆறு, ஓடை, கால்வாய்களின் இடையே அமைக்கப்படும் ரப்பர் தடுப்பணையில் நீர் நிரப்புவதன் மூலமாக அதன் உயரம், வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்துகிறது. "இத்தடுப்பணையின் உயரத்தை கூட்டவோ, குறைக்கவோ முடியும் என்பதால் வெள்ள நீரை வடிகட்டவும் வண்டல் மண் படிவங்களை வெளியேற்றவும் முடியும். இது, கான்கிரீட் தடுப்பணைகளில் சாத்தியமல்ல. இதன்மூலமாக விவசாய நிலங்களுக்கு சீரான முறையில் தண்ணீர் கிடைக்கும்," என்றார் கோலா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!