சிறுமி பாலியல் பலாத்காரம்; குடும்பத்தாரிடம் மன்னிப்பு கோரிய பாதிரியார்

கன்னூர்: கேரளாவில் 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யபட்டதன் தொடர்பில் பாதிரி யார் அந்தக் குடும்பத்திடம் மன்னிப்பு கோரினார். பலாத்கார சம்பவத்தை மூடி மறைக்க முயன்ற 5 பாதிரியார்கள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டு உள்ள நிலையில், இவர்கள் அனைவரும் முன் பிணை கோரி உள்ளனர். கேரளா மாநிலத்தில் உள்ள கன்னூர் நகரில் உள்ள ஒரு தேவாலயத்தில் ராபின் வடக்கும் சேரி, 48, என்பவர் பாதிரியாராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்தாண்டு மே மாதம் 16 வயது சிறுமியைப் பாதிரியார் பலாத்காரம் செய்துள் ளார்.

சில மாதங்களில் சிறுமி கர்ப்பிணி ஆனதால் இவ்விவகாரம் வெளியே தெரியவந்தது. கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி காவல்துறையினருக்குச் சிறுமி கடிதம் ஒன்றை எழுதி தனது நிலையை விளக்கியுள்ளார். இக் கடிதத்தை படித்த பெண் காவல் துறை அதிகாரி ஒருவர் சிறுமியை நேரடியாக சந்தித்து வாக்குமூலம் பெற்றுள்ளார். அதேசமயம், இத்தகவல் அறிந்த உடன் பாதிரியார் தலை மறைவாகி விட்டார். தனிப்படையை அமைத்த காவல்துறையினர் சில நாட்களில் பாதிரியாரைக் கைது செயதனர். சிறுமியைப் பலாத் காரம் செய்தது உண்மை எனப் பாதிரியார் ஒப்புக்கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து அவர் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

கடந்த வாரம் கைது செய்யப்பட்ட ராபின் வடக்கும்சேரியை போலிசார் விசாரணைக்காக அழைத்துச் செல்கின்றனர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!