சேலை திருடியவரை தண்டிப்பதா

என நீதிபதி கேள்வி புதுடெல்லி: கோடிக் கணக்கில் கொள்ளை யடிப்பவர்கள் சுகமாக வாழ்ந்து வரும் நிலையில், சேலை திருடியவரை தண்டிப்பதா என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இலியா என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை டெல்லி உச்ச நீதிமன்றத் தில் நடந்து வருகிறது.

நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தலைமை நீதிபதி கேகர் தெலுங்கானா அரசுக்குக் கண்டனம் தெரிவித்துப் பேசினார். அவர் கூறுகையில், "நாட்டில் கோடிக்கணக்கில் கொள்ளையடிப்பவர்களை விட்டு விடுகிறீர்கள். அவர்கள் எல்லாம் சுகபோகமாக வாழ்கிறார் கள். ஆனால் சேலை திருடியவரைப் பிடித்து சிறைக்குள் போட்டு இருக்கிறீர்கள்," என்று தனது அதிருப்தியை வெளியிட்டவர், இந்த வழக்கு விசாரணையை இன்று 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!