முழுவதும் பெண்களால் இயக்கப்பட்டு வரலாறு படைத்த விமானப் பயணம்

வரலாறு படைத்து மகளிர் தினத்தைக் கொண்டாடியுள்ளது ஏர் இந்தியா. அனைத்துலக மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டதை முன் னிட்டு பெண்கள் மட்டுமே உள்ள விமானப் பயணக் குழுக்களைக் கொண்டு சென்ற மாதம் 26ஆம் தேதி முதல் நேற்று வரை மொத்தம் 10 உள்ளூர், வெளிநாட்டு விமானப் பயணங்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளது அந்நிறுவனம். இந்தப் பயணங்களின்போது ஏர் இந்தியா நிறுவனத்தின் பெண் விமானிகள் அனைத்து விதமான விமானங்களையும் இயக்கினர். விமானிகள், விமான சிப்பந்தி கள் மட்டுமின்றி விமான நிலையத் தின் தொழில்நுட்பப் பிரிவு, விமானப் போக்குவரத்து கட்டுப் பாட்டுப் பணியாளர்கள், விமான ஓடுதளப் பணியாளர்கள் ஆகிய அனைவரும் பெண்களே என்பது இந்த ஏற்பாட்டின் சிறப்பு.

புதுடெல்லி-சான்ஃபிரான்சிஸ்கோ சென்று திரும்பிய அனைத்து பெண்கள் விமானத்தின் விமானிகள், சிப்பந்திகள். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!