ஓபிஎஸ்ஸுக்கு ஆயிரக்கணக்கானோர் ஆதரவு

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வலியுறுத்தி ஓ.பன்னீர்செல்வம் அணியினர் நேற்று நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். இதனால் சசிகலா தரப்பு கடும் அதிர்ச்சியில் இருப்ப தாகக் கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் மொத்தம் 36 இடங்களில் ஓபிஎஸ் அணி யினர் உண்ணாவிரதம் மேற் கொண்டனர். முன்னாள் அமைச் சர்கள், எம்எல்ஏக்கள் இதில் திரளாகப் பங்கேற்றனர். அனைத்து இடங்களிலும் கூடிய கூட்டம் பன்னீர்செல்வம் தரப்புக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. அதேசமயம் அதிமுகவின் நடப்பு நிர்வாகிகள் பலர் உண்ணாவிரதம் மேற்கொண்டது சசிகலா தரப்புக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. "ஜெயலலிதாவுக்கு அளிக்கப் பட்ட கருப்பு பூனைப் படை பாது காப்பை வேண்டும் என்றே விலக்கி அவரை நிராயுதபாணியாக கொன் றுள்ளனர்," என்று உண்ணாவிரதப் பந்தலில் பேசிய அதிமுக முன் னாள் அமைச்சர் பி.எச்.பாண்டியன் குற்றம்சாட்டினர்.

உண்ணாவிரதப் போராட்டத்திற்கு திரண்டுள்ள மக்களுடன் ஓ.பன்னீர்செல்வம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!