கேரளாவிலும் குளிர்பானத் தடை

கோழிக்கோடு: தமிழகத்தைத் தொடர்ந்து கேரளாவிலும் பன் னாட்டுக் குளிர்பானங்களுக்குத் தடை விதிக்க கேரள வியாபாரி விவசாய சங்கத்தின் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. நிலத்தடி நீரை உறிஞ்சும் பன்னாட்டுக் குளிர்பான நிறுவனங் களுக்குத் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்தச் சங்கம் தெரிவித்தது. வரும் 14ம் தேதி தங்களது முடிவு குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனுக்குத் தெரிவித்து அவரது ஆதரவையும் கோரவிருப்பதாக சங்கத் தலைவர் நஜுருதின் கூறினார். எலுமிச்சைச் சாறு, இளநீர் விற்பனையை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளால் பன்னாட்டுக் குளிர்பான விற் பனை நிறுவனங்கள் பெருமளவு பின்னடைவைச் சந்திக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!