மும்மொழிக் கல்வித் திட்டத்தைத் தமிழக அரசு எதிர்க்கும்

ஈரோடு: மத்திய அரசு கொண்டு வரவுள்ள மும்மொழிக் கல்வித் திட்டத்தைத் தமிழக அரசு ஏற்காது என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாகத் தெரிவித்துள் ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீதிமன்ற அறிவுறுத் தலின்படி பிற மொழிகளில் தேர்வு எழுத மாணவர்களுக்குத் தமிழக அரசு வாய்ப்பு அளித்துள்ளது என்றார். "பிற மொழிகளில் தேர்வு எழுதுவது தொடர்பாக உயர்நீதி மன்றத்தில் 47 வழக்குகள் போடப் பட்டிருந்தன. இதையடுத்து நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. "அதன்படி இந்த ஆண்டு 7 ஆயிரத்து 327 பேர் கன்னடம், மலையாளம், உருது, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுது கிறார்கள்," என்றார் செங்கோட் டையன்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!