அமேதிக்கு வந்த கதி

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் அமேதி சட்டமன்றத் தேர்தலில் தொகுதியில் போட்டியிட்ட பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காயத்ரி பிரஜாபதி (வலம்) வாக்கு எண்ணிக்கை யின்போது முன்னிலை வகிப்பதாக தகவல் வெளியானது. இதனால் அமேதி தொகுதி வாக்காளர்களில் பலர் அதிர்ச்சியடைந்தனர். தற்போதைய முதல்வரான அகிலேஷ் யாதவ் அமைச்சரவையில் காயத்ரி பிரஜாபதி அமைச்சராக இருந்தார். இவர் மீது பாலியல் பலாத்கார வழக்குப் பதியப்பட்டுள்ளது. காவல்துறை அவரைத் தேடிவந்தபோது உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் வீட்டில் ஒளிந்திருந்தார் எனவும் கூறப்பட்டது. இதற்கிடையே அவர் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்லக் கூடாது என்பதற்காக கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு விமான நிலையங்களில் கடும் பாதுகாப்புப் போடப்பட்டது. இந்த நிலையில் நேற்று காயத்ரி பிரஜாபதி முன்னிலை வகித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!