174 தமிழர்கள் கைது: ஆந்திர மாநில காவல்துறைக்கு ஜி.கே.வாசன் கண்டனம்

சென்னை: ஆந்திர காவல்துறை அப்பாவி கூலித் தொழிலாளர்களைக் கைது செய்து பொய் வழக்கு போடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் (படம்) கூறியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், செம்மரம் கடத்த வந்ததாக அப்பாவி கூலித் தொழிலாளர்கள் மீது பொய் வழக்கு போட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார். "வாழ்வாதாரத்திற்காக தினக்கூலிகளாக ஆந்திர மாநிலத்துக்கு வேலை தேடிச் சென்ற 177 அப்பாவி கூலித் தொழிலாளர்களை ஆந்திர காவல்துறை கைது செய்துள்ளது. மேலும் கைது செய்தவர்களைக் கொடுமைப்படுத்தி அழைத்து வந்து அவர்களை அச்சுறுத்தி விசாரணை செய்தது மனித உரிமை மீறிய செயலாகும். "கடந்த ஆண்டு 20 அப்பாவி தமிழர்களை ஆந்திர வனத்துறை கொடூரமான முறையில் சுட்டுக்கொன்ற வடு இன்னும் ஆறாத நிலை யில், இக்கைது நடவடிக்கை அன்றாட வாழ்வாதாரத்திற்காக வேலை தேடிச் செல்லும் கூலித் தொழிலாளர்கள் மத்தியில் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தி உள்ளது," என வாசன் தெரிவித்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!