மனைவிக்கு ஆலயம் எழுப்பிவரும் காவல்துறை அதிகாரி

திருமண பந்தத்தில் அடியெடுத்து வைத்தபின் வாழ்க்கைத் துணை யாக அமைந்த கணவரையே தனது மூச்சாகக் கருதி, கண்ணை இமை பாதுகாப்பதுபோல் அக்க றையுடன் அவரைக் கவனித்து வந்தார் திருமதி ஸ்ரீவாணி. கணவர் வேலைக்குச் சென்று விட்டபின்னும் அவரது நினைவு களே திருமதி ஸ்ரீவாணியின் மனதை நிறைத்திருக்கும். சாப்பிடும் வேளை வந்ததும் தவறாமல் தொலைபேசியில் அழைத்து கணவர் உணவருந்தி விட்டாரா என்பதைத் தெரிந்து கொள்ளும் அவர், இரவு எவ்வளவு நேரமானாலும் கணவர் வரும் வரை கண்விழித்துக் காத்திருப் பார். இப்படி கணவரும் மூன்று குழந்தைகளுமே எல்லாமாக வாழ்ந்து வந்த அவர், தனது உடல்நலன் குறித்து அதிக அக்கறைகொள்ளாததால் நோய் வாய்ப்பட்டு கடந்த 2015ஆம் ஆண்டில் உயிர்நீத்தார். ஆருயிர் மனைவி இறந்த துக்கம் அவருடைய கணவர் திரு முனிராமையாவை வாட்டியது. இப்போது உயிருடன் இல்லா விட்டாலும் உணர்வில் இரண்டறக் கலந்திருக்கும் தனது மனைவிக் காகக் கோவில் கட்ட முடிவு செய்தார் திருப்பதி காவல்துறை துணைக் கண்காணிப்பாளரான திரு முனிராமையா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!