2019க்குப் பின்னும் மோடி ஆட்சி

இந்தியாவில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள் 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் இப்போதைய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியே வெற்றி பெறுவார் என்பதைக் காட்டுவதாக அமைந்துள்ளன என்று அமெரிக்க அரசியல் நிபுணர்கள் கருத்துரைத் துள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் மொத்த முள்ள 403 தொகுதிகளில் 312 இடங்களையும் உத்தரகண்ட்டில் 70ல் 57 தொகுதிகளையும் மோடி யின் பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. கோவாவில் காங்கிரசைவிட நான்கு இடங்களில் குறைவாக வென்றபோதும் மற்ற கட்சிகளின் துணையுடன் பாஜக ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தது. அதேபோல மணிப்பூரிலும் ஆட்சி அமைக்கும் படி பாஜகவுக்கு மாநில ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இந்த முடிவுகளை வைத்துப் பார்க்கும்போது 2014 நாடாளு மன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது பிறழ்ச்சியான முடிவு அல்ல என்று அமெரிக்க நிபுணர் ஒருவர் கூறியுள்ளார். மற்றொரு வரோ, 2019க்குப் பிறகும் மோடியே ஆட்சி அரியணையில் தொடர்வார் என்று குறிப்பிட்டுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!