‘தேர்வில் வெற்றிபெற உதவும் ரூ.1,900 மந்திரப் பேனா’

குஜராத்: அதிர்ஷ்டம் தரும் மந்திரப் பேனாவை வாங்கி தேர்வு எழுதினால் நிச்சயம் வெற்றி பெறமுடியும் என்று கூறி ரூ.1,900க்கு விற்கப்படும் பேனாவை வாங்க வரும் மாணவர்கள், பெற்றோர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. குஜராத் மாநிலம், பஞ்சமகால் மாவட்டத்தில் கஸ்தாபஞ்சன் என்ற கோயில் உள்ளது. அக் கோயிலின் அனுமன் பக்தரான பாபுஜி என்பவர் கொடுத்துள்ள ஒரு விளம்பரம் பத்திரிகைகளி லும் சமூக வலைத்தளங்களிலும் வேகமாகப் பரவி வருகிறது. அந்த விளம்பரத்தில் உங்கள் மகன் அல்லது மகள் பத்து, பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு களில் கட்டாயம் தேர்ச்சி பெறவேண்டும் என்றால் சரஸ் வதி ஹனுமான் பூசையில் வைத்து விற்பனை செய்யப்படும் இந்தப் பேனாவை வாங்கிக் கொடுங்கள். மாணவர்கள் 100 விழுக்காடு தேர்ச்சி பெறுவார்கள். இல்லையெனில் பணம் திருப்பிக் கொடுக்கப்படும் என்று அறிவித் துள்ளார். பேனாக்களை வாங்க வரும் போது மாணவர்களின் ஹால் டிக்கெட், கல்லூரி அல்லது பள்ளி அடையாள அட்டை, கைபேசி எண் ஆகியவற்றின் நகலையும் அளிக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!