விமானப் படை விமானம் விழுந்தது

ராஜஸ்தான் மாநிலத்தில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானம் விழுந்து நொறுங்கியது. வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த அந்த விமானம் பார்மர் மாவட்டத்தின் சடர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ‌ஷிவ்கர் கிராமத்தில் இருக்கும் வயல்வெளியில் நேற்று பிற்பகல் விழுந்து நொறுங்கியதாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். விபத்துக்குள் ளான விமானத்தில் சென்ற இரு பயிற்சி விமானிகளும் அவசர கதவைத் திறந்து பாராசூட் வழியாக கீழே குதித்து உயிர் தப்பியதாகவும் இந்த விபத்தில் ‌ஷிவ்கர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை, பெண் உள்பட மூவர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!