பலாத்கார வழக்கு: உ.பி. முன்னாள் அமைச்சர் கைது

லக்னோ: பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் குற்றம் சாட்டியதன் தொடர்பில் மூத்த சமாஜ்வாடி கட்சித் தலை வரும் உ.பி. முன்னாள் அமைச் சருமான காயத்ரி பிரஜாபதி, கைது செய்யப்பட்டு 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப் பட்டார். அண்மையில் நடந்த உ.பி. தேர்தலில் சமாஜ்வாடி சார்பில் போட்டியிட்ட காயத்ரி பிரஜாபதி தோல்வி அடைந்தார். கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி முதல் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டின் காரணமாக தலைமறைவாக இருந்து வந்த காயத்ரி பிரஜாபதியை லக்னோ வின் ஆசியானா வட்டாரத்தில் நேற்று காலை சிறப்புப் போலிஸ் படையினரும் உள்ளூர் போலி சாரும் கூட்டாக இணைந்து கைது செய்தனர்.

பாலியல் குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்ட உ.பி. முன்னாள் அமைச்சர் காயத்ரி பிரஜாபதியை போலிசார் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்கின்றனர். படம்: ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!