தொலைக்காட்சிப் பெட்டி வெடித்து சிறுவன் பரிதாப பலி

விருதுநகர்: தொலைக்காட்சிப் பெட்டி வெடித்ததில் பள்ளி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் விருதுநகர் அருகே உள்ள சங்கரலிங்கபுரத்தில் நேற்று முன்தினம் நிகழ்ந்தது. அப்பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரின் மகன் தயாநிதி ஆறாம் வகுப்பு பயின்று வந்தான். செவ்வாய்க்கிழமை வீட்டில் தனியாக இருந்த தயாநிதி, தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தொலைக்காட்சி பெட்டி திடீரென வெடித்துச் சிதறியதில் சிறுவனின் உடலில் தீ பரவியது. இதில் சிறுவன் தயாநிதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!