கோவா சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பு: பாரிக்கர் வெற்றி

பனாஜி: கோவா சட்டமன்றத்தில் பாஜகவின் மனோகர் பாரிக்கர் (படம்) பெரும்பான்மையை நிரூ பித்து நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார். 40 உறுப்பினர்கள் கொண்ட கோவா சட்டமன்றத்தில் காங்கிரஸ் 17 இடங்களையும் பாஜக 13 இடங்களையும் கைப்பற்றின. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் கோவா முன் னேற்றக்கட்சி, மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சி, இரு சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெற்ற பாஜக ஆட்சியமைக்க முடிவு செய்தது. இதையடுத்து, கோவா மாநில ஆளுநர் மிருதுளா சின்ஹாவைச் சந்தித்த மனோகர் பாரிக்கர் தனக்கு 22 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக கடிதத்தை வழங்கி ஆட்சியமைக்க உரிமை கோரியதையடுத்து, மனோகர் பாரிக்கரை ஆட்சியமைக்க வரு மாறு அவர் அழைப்பு விடுத்தார்.2017-03-17 06:00:00 +0800

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!