‘இழப்பீடாக ரயிலை வைத்துக்கொள்’

சண்டிகர்: ஒரு வித்தியாசமான தீர்ப்பை நேற்றுமுன்தினம் வழங்கியிருக்கிறார் லூதியானா நீதி அரசர். கடந்த 2007ஆம் ஆண்டு ஜலந்தர் அருகில் உள்ள கடனா கிராமத்தில் ரயில் நிலையம் கட்ட விவசாயி சம்பூரன் சிங் என்பவரது நிலத்தை ரயில்வே துறை எடுத்துக் கொண்டது. லூதியானா நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, விவசாயிக்கு இழப்பீடாக ரூ.1.47 கோடி வழங்க உத்தரவிட்டார். அப்போது அதை ஏற்றுக்கொண்ட ரயில்வே நிர்வாகம் விவசாயிக்கு ரூ.42 லட்சம்தான் கொடுத்தது.

மறுபடியும் நீதிமன்றத்தின் படியேறிய விவசாயிக்கு நீதிபதி வழங்கிய தீர்ப்பு ஜாக்பாட்டாக அமைந்துள்ளது. நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் வெறும் 42 லட்சம் மட்டும் வழங்கியதால் கோபமடைந்த நீதிபதி ஜஸ்பால் வர்மா, அமிர்தசரசுக்கும் டெல்லிக்கும் இடையே ஓடும் ஸ்வர்ணா சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை விவசாயி சம்பூரன் சிங்கிடம் ஒப்படைக்கும்படி ஆணையிட்டார். இதுமட்டுமல்ல; விவசாயியை லூதியானா ரயில்நிலைய மாஸ்டராகவும் நியமித்து உத்தரவிட்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!