தமிழ், தமிழர் என்று சொன்னவர்கள் எல்லாம் மக்களுக்காக எதையும் செய்யவில்லை: முதல்வர் பழனிச்சாமி

கோவை: எதிர்க்கட்சி என்றால் அரசின் கொள்கைகளை, திட்டங்களை எதிர்க்கின்ற கட்சி என்று பொருள் கொள்ளக்கூடாது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். கோவையில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய அவர், தமிழ், தமிழர் என்று சொன்னவர்கள் எல்லாம் மக்களுக்காக எதையுமே செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார். "அரசு திட்டங்களின் நிறை குறைகளை எடுத்துச்சொல்லி, குறைகளை களைவதற்கான ஆலோசனைகளை வழங்குவது தான் எதிர்க்கட்சியினுடைய நற் பண்பு என்று எதிர்க்கட்சிகளுக் கான இலக்கணத்தை ஜெயலலிதா தெளிவாக எடுத்துரைத்து இருந் தார். அந்த வாக்கையே வேத வாக்காகக் கொண்டு செயல்படும் எதிர்க்கட்சிகளையே தமிழக மக் கள் மதிப்பார்கள். "ஆட்சி அதிகாரத்தை கைப் பற்றுவது ஒன்றையே நோக்கமாக கொண்டு அரசியல் நடத்துவது மக்கள்விரோத செயலாகும். ஆளுங்கட்சி மீது அவதூறு பேசுவதுதான் எதிர்க்கட்சியின் பணி என்று நினைத்துக்கொண்டு செயல்படுபவர்களை மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கி றார்கள்," என்றார் முதல்வர் எடப் பாடி பழனிச்சாமி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!