தமிழ்நாடு: 2016ல் நிகழ்ந்த விபத்துகளில் 17,218 பேர் பலி

தமிழகத்தில் சென்ற ஆண்டில் மட்டும் மொத்தம் 71,431 சாலை விபத்துகள் நடந்ததாகவும் அதில் 17,218 பேர் உயிரிழந்ததாகவும் போக்குவரத்துத் திட்டமிடல் பிரிவு தெரிவித்திருக்கிறது.. வாகனமோட்டிகள் அதிவேகத் தில் வாகனங்களை ஓட்டுவதும் அவர்களின் கவனக்குறைவுமே பெரும்பாலான விபத்துகளுக்குக் காரணமாகக் கூறப்படுகின்றன. இருப்பினும், விதிகளை மீறி அமைக்கப்படும் வேகத்தடைகளா லும் அடிக்கடி விபத்துகள் நிகழ் வதாகச் சொல்லப்படுகிறது. சில நாட்களுக்குமுன் பிரபல கார் பந்தய வீரர் அஸ்வின் சுந்தரும் அவருடைய மனைவி நிவேதாவும் சென்ற கார் விபத் துக்குள்ளாக, அவர்கள் இருவரும் தீயில் கருகி உயிரிழந்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!