அரசுப் பேருந்து சிறைபிடிப்பு: தேர்வு எழுதச் சென்ற மாணவர்கள் தவிப்பு

சேலம்: அரசுப் பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்ததால் தேர்வு எழுதச் சென்ற 10ஆம் வகுப்பு மாணவர்கள் தவிப்புக்குள்ளாகி னர். குடியாத்தம் அருகே உள்ள கூடநகரம் பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் சரிவர செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கூடநகரம் பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று காலை மறியலில் ஈடுபட்டதுடன், அவ்வழியே வந்த அரசுப் பேருந்தையும் சிறைபிடித்தனர். நேற்று 10ஆம் வகுப்புக்கு கணிதப் பொதுத் தேர்வு நடந்தது. இதற்காகப் பேருந்தில் ஏறி பள்ளிக்குச் செல்ல விருந்த மாணவர்கள் தவித்தனர். எனினும் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் இதைப் புரிந்துகொண்டு பேருந்தை உடனடியாக விடுவித்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!