கோடைக்கும் முன்பே தகிக்கும் வெயில்; தவிக்கும் மக்கள்

சென்னை: கோடைக் காலம் தொடங்குவதற்கும் முன்பே தமிழ கத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் சீராக அதிகரித்து வருகிறது. தகிக்கும் வெயிலால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். நேற்று முன்தினம் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 41.8 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது. வழக்கத்தைவிட இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் உக்கி ரமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கெ னவே எச்சரித்துள்ளது. அதை மெய்ப்பிக்கும் வகையில் பல பகுதிகளில் அனலடிக்கிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக இயல்பைவிட 1 டிகிரி வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. எனினும் கோடைக் காலம் தொடங்குவதற்கு முன்பே பல பகுதிகளில் அதிகளவு வெப் பம் பதிவாகியிருப்பது பொதுமக் கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. "நேற்று முன்தினம் மாலை 5.30 மணி நிலவரப்படி கரூர் பரமத்தியில் 41.8 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. மேலும் வேலூர், சேலம், திருச்சியில் 38 டிகிரியும் பாளையங்கோட்டை, மதுரை, தரும புரியில் 37 டிகிரியும் பதிவாகி உள்ளது.

வெயிலுக்கு அஞ்சி முகத்தை மூடிச் செல்லும் பெண்மணி. படம்: தமிழக ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!